/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வி.சி.க., நிர்வாகி துாக்கிட்டு தற்கொலை
/
வி.சி.க., நிர்வாகி துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 05, 2024 03:47 AM
சென்னை : பெரம்பூர், சபாபதி தெருவைச் சேர்ந்தவர் கரிமுல்லா கான், 41. இவர், கொளத்துார் தொகுதி வி.சி.க., துணை அமைப்பாளராக இருந்தார்.
கட்டுமானத் தொழில் செய்து வந்த இவருக்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 1:30 மணியளவில், வீட்டில் கரிமுல்லா கான் தனியாக இருந்துள்ளார்.
வெளியில் சென்றிருந்த மனைவி பாத்திமா பீபி, மாலை 5:00 மணியளவில் வீடு திரும்பிய போது, படுக்கை அறையில் துாக்கில் தொங்கிய நிலையில், கரிமுல்லா கான் இறந்து கிடந்துள்ளார்.
தகவலின்படி வந்த திரு.வி.க.நகர் போலீசார், அவரின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மேலும் விசாரிக்கின்றனர்.

