/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாளை அனுஷ்டான குள உற்சவம் வரதராஜருக்கு வேடுவர் அலங்காரம்
/
நாளை அனுஷ்டான குள உற்சவம் வரதராஜருக்கு வேடுவர் அலங்காரம்
நாளை அனுஷ்டான குள உற்சவம் வரதராஜருக்கு வேடுவர் அலங்காரம்
நாளை அனுஷ்டான குள உற்சவம் வரதராஜருக்கு வேடுவர் அலங்காரம்
ADDED : ஜன 19, 2025 07:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 12வது நாள், காஞ்சிபுரம் செவிலிமேடில் ராமானுஜருக்கு உள்ள தனி சன்னிதியில் அனுஷ்டான குள உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான அனுஷ்டான குள உற்சவம் நாளை நடக்கிறது. இதில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ராமானுஜருடன் செவிலிமேடு சாலை கிணறு அனுஷ்டான குளம் அருகில் உள்ள ராமானுஜர் சன்னிதியில், பகல் 12:00 மணிக்கு எழுந்தருள்கிறார்.
தொடர்ந்து, சாலை கிணறு தீர்த்தத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. பின், மாலை 3:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் வேடுவர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு, துாப்புல் வேதாந்த தேசிகன் கோவிலுக்கு செல்வார்.
அங்கு, பெருமாளுக்கு மரியாதை செலுத்திய பின், வரதராஜ பெருமாள் கோவில் சென்றடைவார். உற்சவத்திற்கான ஏற்பாட்டை வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சாலை கிணறு ஸ்ரீராமானுஜர் சன்னிதி பக்தர்கள் செய்து வருகின்றனர்.