/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
யதோக்தகாரி பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா
/
யதோக்தகாரி பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா
ADDED : ஜன 29, 2024 08:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம், மகம் நட்சத்திர தினத்தன்று தையில் மகம் உற்சவம் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான உற்சவம் நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று, காலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் யதோக்தகாரி பெருமாள், மலர் அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதி, சதாவரம், சின்ன அய்யங்குளம் வழியாக ஓரிக்கை பாலாற்றில் எழுந்தருளினார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம், சாற்றுமறை நடந்தது. தொடர்ந்து, ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவா மணிமண்டபம், வேளிங்கப்பட்டரை, தேசிகர் கோவில் வழியாக மாலை 6:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தார்.