ADDED : மே 17, 2025 01:39 AM

காஞ்சிபுரம், மே 17--
காஞ்சிபுரம் திருக்கயிலாய பரம்பரை தொண்டை மண்டல ஆதீனம், ஸ்ரீஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருமடத்தின் சார்பில், கோடை கால இலவச சைவ சிந்தாந்த பயிற்சி வகுப்பு துவக்க விழா, சேக்கிழார் அரங்கில் நேற்று நடந்தது. சங்கரா கல்லுாரி முனைவர் பாலசந்தர் வரவேற்றார்.
காஞ்சி குமரகோட்ட ஆஸ்தான புலவர் சரவண சதாசிவம், சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன், சென்னை லயோலா கல்லுாரி ஓய்வுபெற்ற தமிழ்துறை பேராசிரியர் அருணை பாலறாவாயன், திருச்சி முருகவேள் ஆகியோர் பேசினர்.
தொண்டை மண்டல ஆதீனம் 234வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் அருளாசி வழங்கி, சைவ சிந்தாந்த பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். ஆலோசனை குழு உறுப்பினர் உறுப்பினர் குப்புசாமி நன்றி கூறினார். ஒன்பது நாட்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பு வரும் 24ம் தேதி நிறைவு பெறுகிறது.