/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர் திருவிழாவை முன்னிட்டு வாகன வழிகாட்டி பலகை அகற்றம்
/
தேர் திருவிழாவை முன்னிட்டு வாகன வழிகாட்டி பலகை அகற்றம்
தேர் திருவிழாவை முன்னிட்டு வாகன வழிகாட்டி பலகை அகற்றம்
தேர் திருவிழாவை முன்னிட்டு வாகன வழிகாட்டி பலகை அகற்றம்
ADDED : மே 04, 2025 01:06 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது.
இந்த பிரம்மோத்சவ விழாவில் வரும் 13ம் தேதி வரை பெருமாள் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடக்க உள்ளது.
இதில் முக்கிய நிகழ்வாக நாளை மறுநாள் கருட சேவையும், 10ம் தேதி திருத்தேர் உத்சவமும், 12ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. இந்நிலையில், திருத்தேர் உத்சவ நாளில், முக்கிய வீதிகளில் தேர் உலா வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கல்வெட்டு கோவிலின் எதிரே, செங்கல்பட்டு சாலையில் வைக்கப்பட்டிருந்த வாகன வழிகாட்டி பலகை அகற்றப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றப்பட்ட வழிகாட்டி பலகை கல்வெட்டு கோவில் அருகே வைக்கப்பட்டுள்ளது.
திருத்தேர் உத்சவம் முடிந்தவுடன், வாகன வழிகாட்டி பலகை மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.