/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுங்குவார்சத்திரத்தில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தம்
/
சுங்குவார்சத்திரத்தில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தம்
சுங்குவார்சத்திரத்தில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தம்
சுங்குவார்சத்திரத்தில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தம்
ADDED : பிப் 22, 2024 11:29 PM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் நான்கு சாலை சந்திப்பு வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள நான்கு முக்கிய சாலைகளையும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதனால், காலை மற்றும் மாலை பீக் ஹவர் நேரங்களில் இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.
ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தினமும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதி அடைகின்றனர்.
மேலும், ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்சாலை குறுகலாகி, விபத்துக்களும் நடக்கிறது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும், சாலையோரமாக லாரி மற்றும் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கக்கூடாது.
மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் புகார் எழுப்பி உள்ளனர்.