/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மேல்பாக்கத்தில் விபத்து அபாயம்
/
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மேல்பாக்கத்தில் விபத்து அபாயம்
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மேல்பாக்கத்தில் விபத்து அபாயம்
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மேல்பாக்கத்தில் விபத்து அபாயம்
ADDED : அக் 13, 2025 12:58 AM

உத்திரமேரூர்:மேல்பாக்கத்தில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
உத்திரமேரூர் அடுத்த, மேல்பாக்கம் கிராமத்தில், களியாம்பூண்டி -- பெருநகர் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி பெருநகர், அனுமந்தண்டலம், சிலாம்பக்கம் ஆகிய கிராமத்தினர், உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.
அதேபோல, களியாம்பூண்டி, திணையாம்பூண்டி, முருக்கேரி ஆகிய கிராமத்தினர் வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், மேல்பாக்கத்தில் இருந்து செல்லும் இச்சாலையில் இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு வெளியூர்களில் இருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
அவ்வாறு வரும் வாகனங்கள் தொழிற்சாலைக்கு உள்ளே நிறுத்தாமல், சாலையிலே நிறுத்தப்படுகின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மேலும், இரவு நேரங்களில் அப்பகுதியில் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேல்பாக்கத்தில் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.