/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் 27ல் வேல் யாத்திரை
/
காஞ்சிபுரத்தில் 27ல் வேல் யாத்திரை
ADDED : அக் 24, 2025 10:24 PM
காஞ்சிபுரம்: வட தமிழகம், காஞ்சிபுரம் மாவட்டம், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், வரும் 27 ம் தேதி, வேல் யாத்திரை நடக்கிறது.
வட தமிழகம், காஞ்சிபுரம் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கந்த சஷ்டி விழாவையொட்டி வரும் 27ம் தேதி வேல் யாத்திரை நடக்கிறது.
இதில், மஹாமண்டலேஸ்வரர் உதாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்வாமி கர்ஷினி அனுபவானந்த் மகராஜ், துாசி நத்தகொல்லை அஞ்சனாத்ரி க்ஷேத்திரம் ஸ்ரீஸ்வாமி கீதானந்த ஹனுமன் மாதாஜி ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர்.
காஞ்சிபுரம் பிள்ளயைார் பாளையம் முடங்கு வீதியில் இருந்து யாத்திரை புறப்பட்டு கிருஷ்ணன் தெரு, புத்தேரி தெரு, கச்சபேஸ்வரர் கோவில் வழியாக குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், வேல் யாத்திரை நிறைவு பெறுகிறது.
யாத்திரைக்கான ஏற்பாட்டை விஸ்வ ஹிந்து பரிஷத் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

