/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க வெங்காடு மக்கள் கோரிக்கை
/
சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க வெங்காடு மக்கள் கோரிக்கை
சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க வெங்காடு மக்கள் கோரிக்கை
சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க வெங்காடு மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 06, 2025 02:00 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில், நாவலுாரில் இருந்து, வெங்காடு செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. பிள்ளைபாக்கம் சிப்காட்டின் ஒருபகுதியாக உள்ள வெங்காடில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
தவிர, இந்த சாலை வழியாக, வெங்காடு கிராம மக்கள, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில், கொளத்துார் ஏரிக்கு உபரி நீர் செல்லும் கால்வாய் குறுக்கே சிறுபாலம் உள்ளது.
இந்த சிறுபாலத்தில் இருபுறமும் தடுப்பு அமைக்கப்படவில்லை. இதனால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், சிறுபாலத்தின் அருகே, சாலையோரம் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் சாலை வளையில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருவது தொடர் கதையாக உள்ளது.
எனவே, வெங்காடு சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.