/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண்புழு உரம் தயாரிப்பு படுக்கை வழங்கல்
/
மண்புழு உரம் தயாரிப்பு படுக்கை வழங்கல்
ADDED : ஜன 01, 2025 07:31 PM
உத்திரமேரூர்:வேளாண்- உழவர் நலத்துறை சார்பில், 2024 -- 25ம் ஆண்டின், முதல்வரின் 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' திட்டத்தில், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி, உத்திரமேரூர் அருகே புலியூர் கிராமத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் பங்கேற்று, விவசாயிகளுக்கு மண்புழு உரத்தின் பயன்பாட்டை எடுத்துரைத்து, ஆறு விவசாயிகளுக்கு, தலா 6,000 ரூபாய் மதிப்பில், 50 சதவீத மானியத்துடன், மண்புழு உர படுக்கைகளை வழங்கினார்.
தொடர்ந்து, அரசாணிமங்கலம் பகுதியில் நெல் விதை பண்ணை வயல்களை பார்வையிட்டார். பின், உத்திரமேரூர் வட்டார வேளாண் அலுவலகத்தில், விதை முளைப்பு திறன் பரிசோதனையை ஆய்வு செய்தார். வேளாண் உதவி இயக்குநர் முத்துலட்சுமி உடனிருந்தார்.