ADDED : நவ 04, 2024 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:'விதைகள்' தன்னார்வ அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரையை பலப்படுத்தும் வகையிலும், மண் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகள், பனை விதைகள் உள்ளிட்டவை நடவு செய்து வருகின்றனர்.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், லிங்காபுரம் மாரியம்மன் கோவில் குளம் மற்றும் தாங்கி சரஸ்வதி குளக்கரையை பலப்படுத்தும் வகையில், கரையை சுற்றிலும் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்ததும், மண்ணரிப்பை தடுக்க கூடியதுமான வெட்டிவேர் நேற்று நடவு செய்யப்பட்டது.
இதில், விதைகள் தன்னார்வ அமைப்பினர், பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து வெட்டிவேர் நடவு செய்தனர்.