/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாவட்ட யோகாசன போட்டியில் வித்யாஷ்ரம் பள்ளி சாம்பியன்
/
மாவட்ட யோகாசன போட்டியில் வித்யாஷ்ரம் பள்ளி சாம்பியன்
மாவட்ட யோகாசன போட்டியில் வித்யாஷ்ரம் பள்ளி சாம்பியன்
மாவட்ட யோகாசன போட்டியில் வித்யாஷ்ரம் பள்ளி சாம்பியன்
ADDED : ஆக 28, 2025 01:39 AM

காஞ்சிபுரம்,:மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில், காஞ்சிபுரம் வித்யாஷ்ரம் துவக்கப் பள்ளி மாணவ - மாணவியர், 8 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என, 14 பதக்கம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
தாம்பரத்தில் உள்ள காயகற்பக மூலிகை மருத்துவமனை சார்பில், சின்ன காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இதில், மாவட்டம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த 300 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இப்போட்டியில், காஞ்சிபுரம் வித்யாஷ்ரம் துவக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவ - மாணவியர், 8 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என, மொத்தம் 14 பதக்கங்களை வென்று 2025 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை பள்ளி முதல்வர் டாக்டர். ரகுராமன், ஒருங்கிணைப்பாளர் தீபா மற்றும் யோகா பயிற்சியாளர் சுதர்சன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

