/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெஞ்சல் புயலுக்கு மின் சப்ளை அறவே இல்லை மூன்று தினங்களாக அல்லாடும் கிராம மக்கள்
/
பெஞ்சல் புயலுக்கு மின் சப்ளை அறவே இல்லை மூன்று தினங்களாக அல்லாடும் கிராம மக்கள்
பெஞ்சல் புயலுக்கு மின் சப்ளை அறவே இல்லை மூன்று தினங்களாக அல்லாடும் கிராம மக்கள்
பெஞ்சல் புயலுக்கு மின் சப்ளை அறவே இல்லை மூன்று தினங்களாக அல்லாடும் கிராம மக்கள்
ADDED : டிச 02, 2024 02:23 AM

காஞ்சிபுரம், டிச. 2-
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக, நேற்று முன் தினம் அதிகாலையில் இருந்து, மழை பெய்ய துவங்கியது. மாவட்டம் முழுதும், இடைவிடாமல் மழை பெய்ததால், பிரதான சாலைகளில், மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்திருந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று வெகுவாக பாதிக்கப்பட்டது.
மழை, வெள்ளம் பாதிக்கும், 72 இடங்களில், 21 மண்டல குழு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களுக்கு, உடனடி தீர்வுக்கு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு வந்தன.
குன்றத்துார் ஒன்றியம், வரதராஜபுரம் சுற்றியுள்ள பகுதிகளில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து முடுக்கி விட்டார். காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான கந்தசாமி, செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்து,24 மணி நேரமும் ஏரியை கண்காணிக்க உத்தரவிட்டார்.
மாவட்டத்தில், தாழ்வான இடங்களில் வசிக்கும், 96 குடும்பங்களை சேர்ந்த, 333 பேரை, 13 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, பாய், தலையணை போன்றைவை வழங்கப்பட்டுள்ளன. குன்றத்துார் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் வசிப்போரை மீட்க, 20 படகுகைளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக, ஒரு செ.மீ.,மழை என, மொத்தம், 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் துணை மின் நிலையத்தில் இருந்து, வினியோகம் செய்யப்படும் மின்சாரம் கொட்டவாக்கம், போந்தவாக்கம், சாமந்திபுரம், மூலப்பட்டு ஆகிய கிராமங்களில், நேற்று முன் தினம் மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களில் மின்சார வினியோகம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன.
அதேபோல், அய்யன்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து சப்ளையாகும் மின்சாரம் வில்லிவலம் கிராமத்தில் மூன்று தினங்களாக மின் சப்ளை அறவே இல்லை. கிராம மக்கள் அளித்த புகாரின் படி நேற்று, 4:00 மணிக்கு பிறகு மின் சப்ளை வழங்கப்பட்டது.இருப்பினும், இரு தினங்களாக மின் சாதனப் பொருட்களை இயக்க முடியாமலும், மின் மோட்டார்கள் இயங்காததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. சம்பா பருவத்தில் நடவு செய்த நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.
நவரை பருவத்திற்கு உழவு ஓட்டிய நிலங்களில், மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
சேதமமான சாலையில் மழைநீர் தேக்கம்
ஓரிக்கையில் பழங்குடியினர் அவதி
காஞ்சிபுரம், டிச. 2-
காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு ஓரிக்கை, நேரு நகரில், 30க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில், மேடு, பள்ளமாக உள்ள சாலையல், மழை நீர் குளம்போல தேங்குகிறது. மேலும், மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லாததால், பல நாட்களாக தேங்கும் மழை நீரில் நடந்து செல்வோருக்கு சரும நோய் ஏற்படுகிறது.
நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு, புதிதாக சாலையும், வடிகால்வாய் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என, ஓரிக்கை நேரு நகரை சேர்ந்த பழங்குடியினர் வலியுறுத்தியுள்னர்.
பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து படங்கள் மட்டும் சார்...
பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து படங்கள் மட்டும் சார்...
மழை பாதிப்பு .. படங்கள் மட்டும் சார்...
மழை பாதிப்பு .. படங்கள் மட்டும் சார்...
உத்திரமேரூர் தாலுகாவில்
'பெஞ்சல்' புயலால்
மரங்கள் சாய்ந்தன
உத்திரமேரூர், டிச. 2--
உத்திரமேரூர் - -வந்தவாசி நெடுஞ்சாலை, மானாம்பதி பகுதியில், 'பெஞ்சல்' புயலால், ஏற்பட்ட மழையின்போது நேற்று முன்தினம், புளிய மரம் முறிந்து நெடுஞ்சாலையிலே விழுந்தது.
இதனால், அப்பகுதியில், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் முறிந்து விழுந்த மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
அதேபோல, உத்திரமேரூர் - -காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், மணல்மேடு பகுதியில் முறிந்து விழுந்த காட்டுவாகை மரத்தை அகற்றி போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, உத்திரமேரூர் பேரூராட்சி, எம்.ஜி.ஆர் நகரில் மின் கம்பம் சாய்ந்தது. உயிர்ச்சேதம் ஏற்படுவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆலப்பாக்கம் நிவாரண முகாமில்
16 பேர் தங்கவைப்பு
உத்திரமேரூர், டிச. 2--
-உத்திரமேரூர் தாலுகா, ஆலப்பாக்கம் கிராமத்தில், 'பெஞ்சல்' புயலால் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதியில் வசித்து வந்த பழங்குடியினர் 16 பேரை, வருவாய் துறையினர் மீட்டனர்.
பின், ஆலப்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் இயங்கி வரும், மழை நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு போர்வை, உணவு, பிரட், பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆலப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடி கூறியதாவது:
'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற மழை நிவாரண முகாம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, போர்வை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து, அவர்கள் மழை நேரத்தில் தாழ்வான பகுதிக்கு செல்லாதபடி கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாலையில் சாய்ந்த மரங்கள்
வெட்டி அகற்றம்
உத்திரமேரூர், டிச. 2-
பெஞ்சல் புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், கடந்த 30ம் தேதி, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, பல்வேறு இடங்களில் சாலையோர மரங்கள் சாய்ந்தன.
உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில், ஆணைப்பள்ளம், திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி ஆகிய இடங்களில், மா, புளியன் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதேபோன்று, உத்திரமேரூர் - புக்கத்துறை சாலை, மானாம்பதி சந்திப்பு ஆகிய பகுதி சாலைகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சாலையில் சாய்ந்த மரங்களை ஆட்கள் வாயிலாக வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
பழை பாதிப்பு படங்கள்