/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓராண்டுக்கு பின் வேகமான காற்று பென்னலுார் கிராம மக்கள் மகிழ்ச்சி
/
ஓராண்டுக்கு பின் வேகமான காற்று பென்னலுார் கிராம மக்கள் மகிழ்ச்சி
ஓராண்டுக்கு பின் வேகமான காற்று பென்னலுார் கிராம மக்கள் மகிழ்ச்சி
ஓராண்டுக்கு பின் வேகமான காற்று பென்னலுார் கிராம மக்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 24, 2024 01:11 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம் பென்னலுார் கிராமத்திற்கு, உத்திரமேரூர் துணை மின் நிலையம் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில், ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து குறைந்த மின்னழுத்த பிரச்னை இருந்துவந்தது.
இதனால், இரவு நேரங்களில் டியூப்லைட், டிவி, ஏசி, பிரிஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள்இயங்காமல் பழுதடைந்தன.
மேலும், மின் விசிறிகள் மெதுமாக சுற்றுவதால், இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால், இப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து, குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, இரு மாதங்களுக்கு முன் அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. எனினும், அதற்கான மின் இணைப்பு வழங்காமல் மின்மாற்றி பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வந்தது.
புதிய மின்மாற்றிவாயிலாக மின் வினியோகம் செய்ய அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து, கடந்த 19ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து, புதிய மின்மாற்றிக்கு மின் இணைப்பு வழங்கினர்.
இதன் காரணமாக, குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

