/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியை எதிர்த்து கிராமத்தினர் மனு

ADDED : ஏப் 01, 2025 06:45 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, ஆனைப்பள்ளம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள காலியிடத்தில், ஒரு மாதத்திற்கு முன், அங்கன்வாடி மையம் கட்டும் பணி துவக்கப்பட்டது.
இதற்கு அந்த கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதன்படி, அங்கன்வாடி மையம் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவக்கப்பட்டது. அப்போது, கிராமத்தினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்டுமான பணி மேற்கொண்டவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
தொடர்ந்து, கிராமத்தினர் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டக்கூடாது என்று உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமாரிடம் நேற்று மனு அளித்தனர்.
மனு விபரம்:
ஆனைப்பள்ளம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காலி இடம் கோவிலுக்கு சொந்தமானது என்றும், இந்த இடத்தில் பொங்கல் வைக்கவும், பக்தர்கள் கோவிலை சுற்றிவரவும் பயன்படுத்தி வருகிறோம்.
இன்னும், ஒரு மாத காலத்தில் திருவிழா தொடங்க உள்ளது. எனவே, கோவிலுக்கு அருகே அங்கன்வாடி மையம் கட்டும் பணியை நிறுத்தி, கட்டுமான பொருட்களை அங்கிருந்து அகற்ற பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.