/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் கடை திறக்காததால் கிராம மக்கள் மறியல்
/
ரேஷன் கடை திறக்காததால் கிராம மக்கள் மறியல்
ADDED : ஜூன் 25, 2025 01:54 AM

காஞ்சிபுரம்:விச்சாந்தாங்கல் கிராமத்தில் ரேஷன் கடை சரிவர திறக்காததால், உத்திரமேரூர் சாலையில், கிராம மக்கள் மறியல் செய்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த, விச்சாந்தாங்கல் கிாரமத்தில், கூட்டுறவு துறை கீழ் செயல்படும் ரேஷன் கடை, வாரத்திற்கு மூன்று முறை செயல்பட வேண்டும்.
ஆனால், மாதம் ஒரு சில நாட்கள் மட்டுமே இயங்குவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்னர். இதுதொடர்பாக, கலெக்டரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களும் சரிவரை விநியோகம் செய்யவில்லை என, பல்வேறு புகார்களை விற்பனையாளர் மீது வைக்கின்றனர்.
இந்நிலையில், களக்காட்டூர் கிராமத்தில், உத்திரமேரூர் செல்லும் பிரதான சாலையில். மறியலில் நேற்று காலையில் ஈடுபட்டனர். இதனால், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசாரும், வருவாய் துறையும், மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு நடத்தினர். ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும், நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர்.