/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாவூர் கோவில் குளம் கிராம மக்கள் சீரமைப்பு
/
உள்ளாவூர் கோவில் குளம் கிராம மக்கள் சீரமைப்பு
ADDED : ஜூலை 14, 2025 12:31 AM

வாலாஜாபாத்,:உள்ளாவூர் அகத்தீஸ்வரர் கோவில் குளம் அப்பகுதி மக்கள் சார்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் எதிர்புறத்தில் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பிலான குளம் உள்ளது.
இந்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடுதல், குளத்து நீரைக் கொண்டு கோவிலில் பூஜை செய்தல் மற்றும் அப்பகுதிக்கான நிலத்தடி நீர் ஆதாரமாகவும் குளம் விளங்குகிறது.
பல ஆண்டுளாக இக்குளம் துார்வாராததால் நீர் பிடிப்பு பகுதி துார்ந்து, மழைக்காலத்தில் போதுமான தண்ணீர் சேகரமாகாத நிலை உள்ளது. இதனால், கோடைக்காலத்தில் விரைவாக தண்ணீரின்றி குளம் வறண்டு போகிறது.
மேலும், குளக்கரை சுற்றிய உள்பகுதியில் பதித்திருந்த கருங்கற்கள் பல இடங்களில் பெயர்ந்து குளத்தின் கரை பலவீனமாகி வருகிறது.
இந்நிலையில், உள்ளாவூர் அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை தங்களது சொந்த செலவில் துார்வாரி சீரமைக்க அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீர்மானித்துஉள்ளனர்.
இதன் முதற்கட்டமாக குளத்தின் கரை பகுதியை சுற்றிலும் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.