/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தமிழ் தெரியாத வங்கி பணியாளர்கள் மணிமங்கலத்தில் கிராமத்தினர் அவதி
/
தமிழ் தெரியாத வங்கி பணியாளர்கள் மணிமங்கலத்தில் கிராமத்தினர் அவதி
தமிழ் தெரியாத வங்கி பணியாளர்கள் மணிமங்கலத்தில் கிராமத்தினர் அவதி
தமிழ் தெரியாத வங்கி பணியாளர்கள் மணிமங்கலத்தில் கிராமத்தினர் அவதி
ADDED : மார் 11, 2024 04:39 AM
குன்றத்துார், : மணிமங்கலத்தில் தமிழ் தெரியாத ஊழியர்கள் வங்கியில் பணியாற்றுவதால், விபரம் கேட்ட முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
குன்றத்துார் ஒன்றியம், மணிமங்கலம் ஊராட்சியில், 8,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மணிமங்கலத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை அப்பகுதியினர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், இந்த வங்கியில் தமிழ் மொழி தெரியாத ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், வங்கி சேவை விபரங்களை கேட்டறிய முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கூறியதாவது:
கிராமபுறங்களில் ஆங்கில மொழி தெரியாதவர்கள் அதிகமானோர் உள்ளனர். இந்த நிலையில், மணிமங்கலத்தில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியை தவிர வேறு வங்கிகள் இல்லை. இதனால், இங்கு கூட்டம் நெரிசல் அதிகமாக இருக்கும்.
கிராமபுறத்தில் உள்ள இந்த வங்கியில் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பெண் அதிகாரி ஒருவர் ஹிந்தி, ஆங்கிலம் மொழி மட்டும் தெரிந்தவராக உள்ளார்.
லோன் விபரம், பாஸ் புக், ஏ.டி.எம்., கார்டு, பணம் செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து இவர்களிடம் கேட்டால் ஆங்கிலத்தில் பேசும்படி கூறுகிறார்.
வங்கி ஊழியர்கள் சொல்வது மக்களுக்கு புரியவில்லை, மக்கள் தமிழில் கூறுவது வங்கி ஊழியருக்கு புரியாமல் பெரும் அவதியாக உள்ளது.
இந்த வங்கிக்கு செல்லும் மகளிர், விவசாயிகள், சாமானியர் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
கிராமபுறங்களில் உள்ள வங்கிகளில் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

