/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமுதாய நலக்கூடம் இல்லாததால் 20 கி.மீ., அலையும் கிராமவாசிகள்
/
சமுதாய நலக்கூடம் இல்லாததால் 20 கி.மீ., அலையும் கிராமவாசிகள்
சமுதாய நலக்கூடம் இல்லாததால் 20 கி.மீ., அலையும் கிராமவாசிகள்
சமுதாய நலக்கூடம் இல்லாததால் 20 கி.மீ., அலையும் கிராமவாசிகள்
ADDED : டிச 06, 2024 08:03 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் காட்டாங்குளம் ஊராட்சியில், காட்டாங்குளம், அமராவதிபட்டணம், படூர், மல்லிகாபுரம், விழுதவாடி ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. காட்டாங்குளம் அடுத்த ஆனம்பாக்கம், நீர்குன்றம், நெற்குன்றம், மலையாங்குளம் போன்ற பல கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், தங்கள் குடும்பங்களின் திருமண விழா, பிறந்தநாள் விழா உள்ளிட்ட விஷேசங்களை நடத்த நெல்வாய் கூட்டுச்சாலை அல்லது உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களுக்கு செல்கின்றனர்.
கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள், தனியார் திருமண மண்டபங்களில் பெருந்தொகை செலவு செய்து, குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து காட்டாங்குளம் கிராமவாசிகள் கூறியதாவது:
காட்டாங்குளத்தில் இருந்து தனியார் மண்டபம் உள்ள உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் போன்ற பகுதிகள், 20 கி.மீ., தூரம் இடைவெளி உள்ளது.
இதனால், குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் போது, மண்டபத்திற்கான வாடகை மட்டுமின்றி போக்குவரத்துக்கான செலவுகள் போன்றவை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
எனவே, சுற்றியுள்ள கிராமங்களை மையமாக கொண்டு, காட்டாங்குளம் ஊராட்சியில் சமுதாயக்கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.