/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாக்குபேட்டையில் கைப்பந்து போட்டி
/
பாக்குபேட்டையில் கைப்பந்து போட்டி
ADDED : நவ 13, 2024 11:13 PM

காஞ்சிபுரம:புத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட பாக்குப்பேட்டை பகுதியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, சர்வம் ஃபினான்சியல் இன்குளுசன் டிரஸ்ட் மற்றும் சத்திய சாய் ஆர்கனைசேஷன் இணைந்து குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான கைப்பந்து வாலிபால் போட்டி நடந்தது.
புத்தேரி ஊராட்சி துணைத் தலைவர் கங்கா தலைமை வகித்தார். திட்ட மேலாளர் வெங்கடேசன், வட்டார மேலாளர் நிஷா, விளையாட்டு குழு தலைவர் அமரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல், காஞ்சிபுரம் ஒன்றிய கவுன்சிலர் ரேகா ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இதில், 11 - 14, 15- - 18, 19 - -30 என, மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
இதில் 18 - 30 வயது பிரிவில் எம்.சி.சி. ஸ்டார்க்கின் அணி, 15 புள்ளிகள் எடுத்து முதலிடத்தையும், பி.கே., பாய்ஸ் அணி 11 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். 11 - 14 வயதுக்குட்பட்ட பிரிவில், எம்.சி.சி., அணி 14 புள்ளிகள் எடுத்து முதலிடத்தையும், எஸ்.கே., மாடி அணி 13 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி வென்றவர்களுக்கு கோப்பை, மெடல், சான்றிதழ் வழங்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களை விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களில் இதுபோன்ற போட்டி நடைபெறும் என, உதவி பொது மேலாளர் மோகனவேல் தெரிவித்தார்.