/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி
/
வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 25, 2025 06:09 AM

காஞ்சிபுரம்: வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2.74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 11.26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வரும் ஜனவரி 1ம் தேதியை, தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவைக்கு வாக்காளர்கள் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,545 ஓட்டுச்சாவடி மையங்களில், வரும் 27, 28ம் தேதிகளிலும், ஜன., 3, 4ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதுசம்பந்தமான விழிப்புணர்வு பேரணியை, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் கல்லுாரி மாணவ - மாணவியர் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், சப் - கலெக்டர் ஆஷிக் அலி, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

