/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் கமிஷன் அனுப்பும் தபால் பற்றி வாக்காளர்கள் அச்சப்பட தேவையில்லை ஐ.ஏ.எஸ்., அதிகாரி அறிவுரை

ADDED : நவ 14, 2024 09:08 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் தொடர்பாக, வாக்காளர் பட்டியல் பார்வையாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரகாஷ், தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடந்தது. கட்சி பிரதிநிதிகள், உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரகாஷ் கூறியதாவது:
இம்மாதம் நடைபெற உள்ள 4 சிறப்பு முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், பெயர்களை சரி பார்த்துக் கொள்ளவும், புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய விரும்புபவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு சம்பந்தமாக, தேர்தல் கமிஷன் அனுப்பும் தபால்கள் குறித்து வாக்காளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
இடம் பெயர்ந்த வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சப்- - கலெக்டர் ஆஷிக்அலி உட்பட பலர் பங்கேற்றனர்.