/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டளிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் அலுவலகத்திற்கு பொறுப்பு

ADDED : மார் 20, 2024 10:06 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்தது.
அந்த தேர்தலில், 100 சதவீதம் பொது மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஊரக வளர்ச்சி துறையினர் செய்து வந்தனர்.
நடப்பாண்டு லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்கிற அதே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை, மகளிர் திட்ட அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த துறையினர், மகளிர் குழுவினர் மூலமாக, 100 சதவீதம் பொது மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என, விழிப்புணர்வு நடத்தும் நிகழ்ச்சியை கோலம், விழிப்புணர்வு பேரணி, சைக்கிள் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.