தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் கிளை நுாலகம் இடம் மாற்றம்

 வாலாஜாபாத் கிளை நுாலகம் இடம் மாற்றம்

 வாலாஜாபாத் கிளை நுாலகம் இடம் மாற்றம்


ADDED : நவ 30, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் கிளை நுாலகம், அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் பேரூராட்சியில், பல ஆண்டுகளாக கிளை நுாலகம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நுாலகத்தில், வாலாஜாபாத் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவ - மாணவியர் உட்பட 4,900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நுாலகத்திற்கு வரும் மாணவ - மாணவியர், செய்தித்தாள் மற்றும் அரசு தேர்வு பாடநுால்கள், பொது அறிவு புத்தகங்கள் படித்து தங்களது வாசிப்பு திறனை மேம்படுத்தி கொள்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் அருகே இயங்கிய இந்த நுாலகம், அக்கட்டடம் பழுதானதை அடுத்து அதை கைவிட்டு பழைய பேரூராட்சி அலுவலக கட்டடத்தில் செயல்படுத்தப்பட் டது.

அக்கட்டடமும் சிதிலம் அடைந்ததோடு போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இருந்தது.

இதனால், கிளை நுாலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்தவும் அதுவரை மாற்று கட்டடத்தில் செயல்படுத்த கோரிக்கை எழுந்தது.

அதன்படி, வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ள ஒரு கட்டடத்தில், நேற்று முதல் கிளை நுாலகம் இடம் மாற்றி செயல்படுத்தப்படுகிறது.

இடம் மாற்றம் செய்த தற்காலிக நுாலக கட்டடத்தை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது, வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கு புதிய கட்டட வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என, உறுதி அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us