/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ள தடுப்பு பணிகளில் அலட்சியம் வாலாஜாபாத் கவுன்சிலர் குற்றச்சாட்டு
/
வெள்ள தடுப்பு பணிகளில் அலட்சியம் வாலாஜாபாத் கவுன்சிலர் குற்றச்சாட்டு
வெள்ள தடுப்பு பணிகளில் அலட்சியம் வாலாஜாபாத் கவுன்சிலர் குற்றச்சாட்டு
வெள்ள தடுப்பு பணிகளில் அலட்சியம் வாலாஜாபாத் கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : அக் 04, 2024 07:53 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 21 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரவு- - செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதி தேவைகள் குறித்து பேசினர்.
சத்யா - அ.தி.மு.க.,: ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை, பூசிவாக்கத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளம் சூழும் இடங்களில் தடுப்பு நடவடிக்கை இல்லை.
கடந்த ஆண்டு பருவ மழையின்போது வெள்ள அபாயம் ஏற்பட்ட பகுதிகள் மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்புக்குள்ளான இடங்களில் இந்த ஆண்டும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த அலட்சியத்தால் மக்கள் பாதிக்கும் நிலை உள்ளது.
காஞ்சனா - பி.டி.ஒ.,: மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க குழு அமைத்து முறையாக கண்காணிக்கப்படும். தெரு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சஞ்சீவ்காந்தி - தி.மு.க.,: வாரணவாசி ஊராட்சியில், பல்வேறு தொழிற்சாலைகள் வாயிலாக ஊராட்சிக்கு கிடைக்கின்ற உட்கட்டமைப்பு நிதியில் முறையாக பணிகள் மேற்கொள்வதை கண்காணிக்க வேண்டும்.
காஞ்சனா - பி.டி.ஓ.,: இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.