ADDED : ஜூன் 26, 2025 10:41 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி சிறப்பு கூட்டம் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் மாலா, துணை தலைவர் சுரேஷ் மற்றும் 14 வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போர் மனை பட்டா கோரி விண்ணப்பித்து உள்ளனர்.
அதில், ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முதற்கட்ட பட்டியலின் படி இலவச வீட்டு மனை பட்டா பெற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் தெரு, வடக்கு புதுத்தெரு, வடக்கு புது குறுக்குத்தெரு, பள்ளிக்கூடத்தெரு, பள்ளிக்கூட 2வது குறுக்குத்தெரு, தெற்கு புதுத்தெரு ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 2025-26ம் ஆண்டுக்கான பேரூராட்சி சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், 43 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணி மேற்கொள்ள டெண்டர் விடுவதற்கான ஒப்புதல் தீர்மானம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.