/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை கொட்டும் இடமாக மாறிய வாலாஜாபாத் பொதுக்குட்டை
/
குப்பை கொட்டும் இடமாக மாறிய வாலாஜாபாத் பொதுக்குட்டை
குப்பை கொட்டும் இடமாக மாறிய வாலாஜாபாத் பொதுக்குட்டை
குப்பை கொட்டும் இடமாக மாறிய வாலாஜாபாத் பொதுக்குட்டை
ADDED : பிப் 06, 2026 06:48 AM

வாலாஜாபாத்: வாலாஜாபாத், பாரதி நகரில் பராமரிப்பு இல்லாத பொதுக்குட்டையை அப்பகுதி மக்கள் குப்பை கொட்டி ஆக்கிரமித்துஉள்ளனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில் பாரதி நகர் உள்ளது. இப்பகுதியில், காளியம்மன் கோவில் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான பொதுக்குட்டை பல ஆண்டுகளாக உள்ளது.
மழைக்காலங்களில் இந்த குட்டையில் நிரம்பும் தண்ணீர் அப்பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.
மேலும், குட்டையில் இருந்து வெளியேறும் உபரிநீர், வரத்து கால்வாய் மூலம் வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. இந்த குட்டை முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த ஆண்டுகளில் துார்ந்துள்ளது.
இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த சிலர், இந்த குட்டையில் குப்பைகள் கொட்டி சீர்கேடு ஏற்படுத்துகின்றனர். இதனால், குட்டையில் மழைநீர் தேங்க வழியின்றி மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்குகிறது.
மேலும், குட்டையில் குப்பைகள் நிறைந்துள்ளதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே, இந்த குட்டையை துார்வாரி நான்கு புறத்திலும் கரைகளை செப்பனிட்டு, உபரிநீர் கால்வாயை சீரமைத்திட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

