/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய கட்டடத்திற்கு மாறியது வாலாஜாபாத் சித்த மருந்தகம்
/
புதிய கட்டடத்திற்கு மாறியது வாலாஜாபாத் சித்த மருந்தகம்
புதிய கட்டடத்திற்கு மாறியது வாலாஜாபாத் சித்த மருந்தகம்
புதிய கட்டடத்திற்கு மாறியது வாலாஜாபாத் சித்த மருந்தகம்
ADDED : ஏப் 12, 2025 06:47 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சித்த மருத்துவப் பிரிவு தனியாக இயங்கி வருகிறது. வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமானோர் இங்கு வந்து பலவித நோய்களுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
வாலாஜாபாத் சித்த மருந்தகத்திற்கு சிகிச்சைக்கு வருவோருக்கு நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த சித்த மருந்தகத்திற்கான கட்டடம் மிகவும் சிதிலம் அடைந்து, கட்டடத்தின் கான்கிரீட் பெயர்ந்து மழைக்காலத்தில் நீர் சொட்டும் நிலை இருந்தது.
இதனால், இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஆபத்தான நிலை உள்ளதாக அச்சத்திற்குள்ளாகி புதிய கட்டடம் ஏற்படுத்த வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, வாலாஜாபாத் சித்த மருந்தகத்திற்கு புதிய கட்டடம் கட்ட உத்திரமேரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகே, சித்த மருந்தகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி, சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், புதிய சித்த மருந்தகத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், பேரூர் தி.மு.க., செயலர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.