தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுவர் விளம்பரங்கள் அழிப்பு

 சுவர் விளம்பரங்கள் அழிப்பு

 சுவர் விளம்பரங்கள் அழிப்பு


ADDED : மார் 19, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 08:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சி தலைவர்கள் படம் மற்றும் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்., 23ல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளதைய அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர தடுப்புகள், சாலை மைய தடுப்புகள், மேம்பால சுவர்கள், அரசு அலுவலக சுவர்கள் போன்றவற்றில் உள்ள கட்சி சுவரொட்டிகள் மற்றும் வரைபடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

நகர் பகுதி மட்டுமின்றி கிராமங்கள் தோறும் இப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, உத்திரமேரூர் தொகுதி கிராம ஊராட்சிகளிலும் மின் கம்பங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சி சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் அழிக்கும் பணி, வருவாய் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மும்முரமாக நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us