/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விளக்கு வசதி இல்லாத வாலாஜாபாத் சாய்நகர் பூங்கா
/
மின்விளக்கு வசதி இல்லாத வாலாஜாபாத் சாய்நகர் பூங்கா
மின்விளக்கு வசதி இல்லாத வாலாஜாபாத் சாய்நகர் பூங்கா
மின்விளக்கு வசதி இல்லாத வாலாஜாபாத் சாய்நகர் பூங்கா
ADDED : அக் 29, 2025 10:14 PM
வாலாஜாபாத்: சாய்நகர் பூங்காவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி, 4வது வார்டில் சாய்நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் கடந்த ஆண்டு 60 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் மற்றும் நடை பாதை ஏற்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் கூடுதலாக அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், மின் வசதி பணி முழுமையாக மேற்கொள்ளாததால் மின் விளக்குகள் பொருத்தாமல் விடுபட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால் சிறுவர்களை பூங்காவிற்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் இப்பகுதி இளைஞர்கள் மற்றும் பெரியோர் வரை இப்பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இரவில் மின் விளக்கு எரியாததால் நடைபயிற்சி மேற்கொள்ள வருவோரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சாய்நகர் பூங்காவில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

