/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விழிப்புணர்வு பேனர் வைக்க உத்தரவு வழிகாட்டிய வாலாஜாபாத் தாசில்தார்
/
விழிப்புணர்வு பேனர் வைக்க உத்தரவு வழிகாட்டிய வாலாஜாபாத் தாசில்தார்
விழிப்புணர்வு பேனர் வைக்க உத்தரவு வழிகாட்டிய வாலாஜாபாத் தாசில்தார்
விழிப்புணர்வு பேனர் வைக்க உத்தரவு வழிகாட்டிய வாலாஜாபாத் தாசில்தார்
ADDED : செப் 28, 2024 07:22 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என, 5 தாலுகாக்கள் செயல்படுகின்றன. தாலுகா அலுவலகங்களில் வழங்கப்படும் பட்டா சேவைகள், சான்றிதழ்களுக்கு லஞ்சம் வாங்குவதாக ஏற்கனவே பல புகார்கள் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கருணாகரன், சில நாட்களுக்கு முன், அலுவலக வரவேற்பறையில் பேனர் ஒன்றை வைத்திருந்தார்.
அதில், 'வருவாய் துறையின் 15 வகையான சான்றிதழ்கள், பட்டா மாற்றம், குடும்ப அட்டை, வீட்டு மனை பட்டா போன்ற சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன;
பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் தாசில்தாருக்கு புகார் தெரிவிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பேனர், வருவாய் துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வாலாஜாபாத் தாலுகா நீங்கலாக, மற்ற 4 தாலுகா அலுவலகங்களிலும், இதேபோன்று பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, 4 தாசில்தார்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.