/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கனரக வாகனங்களுக்கு தடை பெயரவிற்கு எச்சரிக்கை பதாகை
/
கனரக வாகனங்களுக்கு தடை பெயரவிற்கு எச்சரிக்கை பதாகை
கனரக வாகனங்களுக்கு தடை பெயரவிற்கு எச்சரிக்கை பதாகை
கனரக வாகனங்களுக்கு தடை பெயரவிற்கு எச்சரிக்கை பதாகை
ADDED : பிப் 13, 2025 12:36 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது, ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலையோர மழைநீர் கால்வாய் பணிகளால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதேபோல, சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், இந்த நெடுஞ்சாலையில், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொடுகாடு, பராசங்குபுரம் போன்ற கிராமங்களும் உள்ளன.
இதையடுத்து, கனரக வாகனங்கள் வருவதற்கு தடை என, இந்த திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள காட்டு கூட்டு சாலை பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.
இதில், கனரக வாகனங்கள் தடை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அருகிலேயே ஸ்ரீபெரும்புதுார் புறக்காவல் நிலையம் இருந்தும், கனரக வாகனங்கள் சென்று வருவது தொடர்கதையாக உள்ளது.
எனவே, கனரக வாகனங்களுக்கு தடை என்ற எச்சரிக்கை பதாகையை மீறி வருவோருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.