/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பகலிலும் ஒளிரும் தெரு மின்விளக்கு கீழம்பியில் ஊராட்சி நிதி வீணடிப்பு

ADDED : பிப் 13, 2024 04:54 AM

கீழம்பி : காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, கீழம்பி வரையுள்ள புறவழிச்சாலை 8 கி.மீ., நீளம் உள்ளது.
உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதியில் இருந்து வேலுார், பெங்களூரு, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகம் சார்பில், தெரு மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், கீழம்பி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின்விளக்குகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தெரு மின்விளக்குகள் இரவு, பகல் என, 24 மணி நேரமும் தொடர்ந்து ஒளிர்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், மின்சாரம் விரயமாவதுடன், மின்வாரியத்திற்கு கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், ஊராட்சி நிதியும் வீணாகிறது.
பல்புகளும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. எனவே, தெரு மின்விளக்குகளை, கீழம்பி ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.