ADDED : டிச 14, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர் ஊராட்சி, பெரும்பாக்கம் சாலையோரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை மின்மோட்டாருடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இதை அப்பகுதிவாசிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் அமைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. பழுதடைந்த மின்மோட்டாரை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை.
இதனால், செடி, கொடிகள் புதர்போல மண்டி, குடிநீர் தொட்டி வீணாகி பயன்பாடின்றி வருகிறது.