/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
/
நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : டிச 07, 2024 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்கதிர்பூர், காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூரில் உள்ள ஏரிநீரை, சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஏரி முழுமையாக நிரம்பினால், உபரிநீர் வெளியேறும் போக்கு கால்வாய் சீரமைக்கும் பணி ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் துவக்கப்பட்டுள்ளது.
இதில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக, ஏரியில் இருந்து ஊராட்சியில் உள்ள குளத்திற்கு மழைநீர் செல்லும் கால்வாய் 3 கி.மீ., நீளமுடையது.
இக்கால்வாயை துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது என, ஊராட்சி பணிதள பொறுப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.