/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அனுமந்தண்டலம் தடுப்பணையில் இருந்து உத்திரமேரூர் ஏரிக்கு நீர்வரத்து துவக்கம்

ADDED : அக் 03, 2025 12:46 AM

உத்திரமேரூர் செய்யாற்றில் உள்ள அனுமந்தண்டலம் தடுப்பணையில் இருந்து, உத்திரமேரூர் ஏரிக்கு நீர்வரத்து துவங்கி உள்ளது.
உத்திரமேரூர் ஏரி, 20 அடி ஆழம், 1.1 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியின் நீரை கொண்டு சுற்றுவட்டார 18 கிராமங்களில் உள்ள 5,500 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் செய்யாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உத்திரமேரூர் நீர்வளத் துறை உதவி பொறியாளர் கண்ணன் கூறியதாவது:
இரண்டு ஆண்டுக்கு முன் ஏரியின் மதகுகள் சீரமைக்கப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் ஏரியிலிருந்து உபரிநீர் செல்லும் கால்வாய்கள் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அனுமந்தண்டலம் தடுப்பணை மூலமாக, நீர்வரத்து ஏற்பட்டு, உத்திரமேரூர் ஏரியில் 0.7 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.