/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை குறைந்ததால் பாலாறு, செய்யாறில் குறைந்து வரும் நீர்வரத்து

ADDED : அக் 28, 2025 11:42 PM

காஞ்சிபுரம்: பாலாறு, செய்யாறில், வினாடிக்கு 22,000 கன அடி நீர் வந்த நிலையில், சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை குறைந்ததால், நேற்றைய கணக்கெடுப்பின்படி நீர்வரத்து குறைந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பிரதான ஆறுகளான செய்யாறு, பாலாறு ஆகிய இரு ஆறுகள் காரணமாக, பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.
மேலும், ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீருக்கு தட்டுப்பாடற்ற நிலை உள்ளது.
இந்த இரு ஆறுகளிலும், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பெய்யும் வடகிழக்கு பருவமழை சமயத்தில் வெள்ளப்பெருக்கு துவங்குகிறது. அதையடுத்து, பிப்ரவரி, மார்ச் மாதம் வரை, ஆற்றின் நீரோட்டம் தொடர்கிறது.
அந்த வகையில், 10 நாட்களுக்கு முன், திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, பாலாறு, செய்யாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாற்றில் 10,000 கன அடியும், செய்யாற்றில் 12,000 கன அடி வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை குறைந்த காரணத்தால், செய்யாறில் 3,000 கன அடியும், பாலாற்றில் 9,000 கன அடி தண்ணீரும் பாய்கிறது.
இதையடுத்து, பாலாறு, செய்யாறு ஆறுகளில் நீர் வரத்து குறைந்துள்ளது.