/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான தரைப்பாலத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
சேதமான தரைப்பாலத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சேதமான தரைப்பாலத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சேதமான தரைப்பாலத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஜன 31, 2024 09:45 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து, சீட்டணஞ்சேரி செல்லும் இணைப்பு சாலை உள்ளது. குறுகியதாக இருந்த இச்சாலையை, அகலப்படுத்தி தார் ஊற்றும் பணி, சில மாதங்களுக்கு முன் நடந்தது.
அப்போது, குருமஞ்சேரி நிலங்களில் இருந்து மழைநீர் வழிந்தோடும் கால்வாயின் இணைப்பாக சாலையில் தரைப்பாலம் கட்டப்பட்டது.
புதிதாக கட்டிய இந்த தரைப்பாலத்தின் சாலையோர ஒரு பகுதி, சில நாட்களுக்கு முன் சேதம் அடைந்தது. சேதமான சாலை பகுதியில், சீட்டணஞ்சேரி பாலாற்றில் இருந்து, விச்சூருக்கு செல்லும் குடிநீர் பைப் தற்போது உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
எனவே, குருமஞ்சேரி சாலையில் சேதமான தரைபாலத்தை சீரமைத்து, அப்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.