/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெங்கச்சேரியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
வெங்கச்சேரியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
வெங்கச்சேரியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
வெங்கச்சேரியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : நவ 20, 2025 04:14 AM

உத்திரமேரூர்: வெங்கச்சேரியில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.
உத்திரமேரூர் ஒன்றியம், வெங்கச்சேரி செய்யாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய்கள் வாயிலாக, உத்திரமேரூர், கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம், மருத்துவன்பாடி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குழாய்கள் வெங்கச்சேரியில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் சாலையின் இருபுறமும் நிலத்தடியில் புதைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், உத்திரமேரூருக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில், வெங்கச்சேரி பகுதியில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து குடிநீர் வெளியேறி சாலையிலேயே தேங்கியுள்ளது. குடிநீர் வீணாவதால், உத்திரமேரூரில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

