/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஏப் 13, 2025 01:56 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, வெங்கச்சேரி பகுதியில் உள்ள செய்யாற்றில் இருந்து, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, குழாய் வாயிலாக குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.
இந்த ஆற்றின் மீது மக்களின் போக்குவரத்துக்காக, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலத்தை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இந்த பாலத்தின் மீது செய்யாற்றில் இருந்து, ஆர்ப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் குழாய் உடைந்து, மூன்று மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
வெளியேறும் குடிநீர் பாலத்திலேயே தேங்கி வருவதால், அப்பகுதியில் பாசி படர்ந்து காணப்படுகிறது. மேலும், குடிநீரில் தொற்றுநோய் பரப்பும் கிருமிகள் கலந்து, பொதுமக்களுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.