/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஜூன் 04, 2025 01:58 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடல் செய்யாற்றில் இருந்து, ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய்கள் வாயிலாக பட்டா, படூர், அருங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் குழாய்கள் சாலவாக்கம் செல்லும் சாலையோரத்தில் புதைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், திருமுக்கூடல் ஊராட்சி அலுவலகம் அருகே, சாலையோரத்தில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் ஒன்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. ஒரு மாதமாக வெளியேறும் குடிநீரானது, சாலையோரத்தில் குளம்போல் தேங்கியுள்ளது.
இதனால், தேங்கியுள்ள தண்ணீரில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, குடிநீரில் கலந்து பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, உடைந்த குடிநீர் குழாயினை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

