தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குடிநீர் சுத்திகரிப்பு மையம் மதிப்பீடு வெளியிடாமல் திறப்பு

 குடிநீர் சுத்திகரிப்பு மையம் மதிப்பீடு வெளியிடாமல் திறப்பு

 குடிநீர் சுத்திகரிப்பு மையம் மதிப்பீடு வெளியிடாமல் திறப்பு


ADDED : பிப் 17, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், குடிநீர் சுத்திகரிப்பு மையம், எவ்வளவு செலவிடப்பட்டு கட்டப்பட்டது என்ற விபரங்களை வெளிப்படுத்தாமல் நேற்று திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தொகுதி மேம்பாட்டு நிதியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை, எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

புதிதாக திறக்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம் எவ்வளவு மதிப்பீட்டில் கட்டப்பட்டது என்ற விபரங்கள் எங்கேயும் பொறிக்கப்படவில்லை. இந்த மையம் எவ்வளவு செலவில் கட்டப்பட்டது என, கலெக்டர் வளாகத்தில் இருந்த பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து, கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம், கேட்டபோது ௧௫ லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டதாக தெரிவித்தார். அரசு கட்டுமானத்தில் திட்டமதிப்பீடு பற்றி வெளிப் படுத்தாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல், பல்வேறு அரசு கட்டடங்கள் எவ்வளவு மதிப்பீட்டில் கட்டப்பட்டது என்ற விபரங்களை மறைப்பது வாடிக்கையாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us