/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஏரியில் மதகு சீரமைப்பு மாற்றுப்பாதையில் பாசனத்திற்கு நீர் திறப்பு

ADDED : செப் 08, 2025 12:37 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஏரியில் மதகு சீரமைப்பு பணியால், நீர்வளத் துறையினர் மாற்றுப்பாதையில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டனர்.
உத்திரமேரூர் ஏரி தண்ணீரை கொண்டு, 5,500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த விளை நிலங்களுக்கு ஏரியில் உள்ள 18 மதகுகளின் வழியே, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்நிலையில், ஏரியில் உள்ள 7வது மதகில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் சிறிதளவே வந்து கொண்டிருந்தது.
இதை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீர்வளத் துறையினர், 10 நாட்களுக்கு முன் மதகை சீரமைக்கும் பணியை துவங்கினர்.
ஆனால், இன்றுவரை சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால், 10 நாட்களாக 7வது மதகு வழியாக தண்ணீர் திறக்காததால், விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால், மாற்றுப்பாதையில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட, நீர்வளத் துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, நீர்வளத் துறையினர், 7வது மதகு அருகே ராட்சத குழாய் பதித்து, பாசன கால்வாயில் நேற்று தண்ணீர் திறந்து விட்டனர்.