/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சம்பா பருவ பாசனத்திற்கு தென்னேரியில் தண்ணீர் திறப்பு
/
சம்பா பருவ பாசனத்திற்கு தென்னேரியில் தண்ணீர் திறப்பு
சம்பா பருவ பாசனத்திற்கு தென்னேரியில் தண்ணீர் திறப்பு
சம்பா பருவ பாசனத்திற்கு தென்னேரியில் தண்ணீர் திறப்பு
ADDED : நவ 25, 2025 04:04 AM
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்கான சாகுபடி பணிகள் துவங்கப்பட்டுள்ளதை அடுத்து, தென்னேரி ஏரியில் இருந்து பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி கிராமத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டிலான ஏரி உள்ளது. மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றானதாக இந்த ஏரி, 5,845 ஏக்கர் பரப்பளவும், 18.6 அடி ஆழம் கொண்டதாகும்.
ஏழு மதகுகள் கொண்ட இந்த ஏரி பருவ மழைக் காலத்தில் முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரைக் கொண்டு, தென் னேரி, மஞ்சம்மேடு, விளாகம், அகரம், அயிமிச்சேரி, ஆம்பாக்கம், வாரணவாசி, சின்ன மதுரப்பாக்கம், பெரிய மதுரப்பாக்கம், தொள்ளாழி, தேவரியம்பாக்கம், திருவங்கரனை உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 5,858 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரை பெய்த பருவ மழைக்கு இந்த ஏரி 15 அடி ஆழத்திற்கு நிரம்பி உள்ளது.
இந்நிலையில், தென்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா பருவத்திற்கான சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், நிலம் பதப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு தென்னேரி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் நேற்று தென்னேரி ஏரி மதகு வழியாக தண்ணீர் திறந்து வைத்தனர்.
இதில், வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றியக் குழு துணை தலைவர் சேகர் மற்றும் தென்னேரி ஏரி நீர் பாசன சங்க தலைவர் பானுநாகப்பன், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

