தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பயன்பாட்டிற்கு வரும் முன் குடிநீர் தொட்டி உடைப்பு

 பயன்பாட்டிற்கு வரும் முன் குடிநீர் தொட்டி உடைப்பு

 பயன்பாட்டிற்கு வரும் முன் குடிநீர் தொட்டி உடைப்பு


ADDED : ஜூலை 05, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 10:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், ஆசூர் ஊராட்சியில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு மத்திய அரசின் 'ஜன்மன்' திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு மின் ஒயரிங் உள்ளிட்ட பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், வீடுகள் தி றக்கப்படுவதற்கு முன், குடிநீர் வசதிக்காக அமைக் கப்பட்டுள்ள தொட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொட்டி அமைத்து 10 நாட்களே ஆகும் நிலையில், திடீரென உடைந்துள்ளதால் பழங்குடியின மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உடைந்த தொட்டியை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வீடு கட்டும் ஒப்பந்ததாரரிடம் கேட்ட போது, 'சில நாட்களுக்கு முன், டிராகடர் வாகனம் மோதியதில் தொட்டி உடைந்தது. வீடுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்முன், உடைந்த தொட்டியை அகற்றி புதிதாக வைக்கப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us