/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.11.75 லட்சத்தில் நீர்த்தேக்க தொட்டி விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு

ADDED : ஜன 19, 2025 02:58 AM

உத்திரமேரூர்,
உத்திரமேரூர் ஒன்றியம் மருத்துவன்பாடி ஊராட்சியில் அருந்ததிபாளையம், மேல்சித்தமல்லி, நாகமேடு, கொருக்கந்தாங்கள் உள்ளிட்ட துணை கிராமங்கள் உள்ளன.
இங்கு மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி, சிறு மின்விசை குழாய்கள், ஆகியவை வாயிலாக, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், வெங்கச்சேரி செய்யாற்று பகுதியில் இருந்து ராட்சத குழாய்கள் வாயிலாகவும் குடிநீர் எடுத்து வரப்பட்டு, பகுதி வாசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, 9 கிலோமீட்டர் தொலைவுள்ள மருத்துவன்பாடிக்கு வரும் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், குடிநீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இதை தவிர்க்க, அப் பகுதிவாசிகள் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி அமைத்து, தண்ணீரை அங்கு சேகரித்து, அங்கிருந்து தண்ணீரை கொண்டுவர கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து, 11.75 லட்சம் ரூபாய் செலவில், திருப்புலிவனம் பகுதியில், புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.