/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ADDED : மார் 29, 2025 01:32 AM

மாகரல்:காஞ்சிபுரம் ஒன்றியம், மாகரல் ஒட்டியுள்ள செய்யாற்றாங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு பல்வேறு ஊராட்சிகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மாகரல் கிராமத்தில் இருந்து காவாந்தண்டலம் செல்லும் சாலையோரம் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடையும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.