/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ADDED : நவ 02, 2025 01:23 AM

களக்காட்டூர்: களக்காட்டூரில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் உள்ள வீடுகளுக்கு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், சேமித்து வைக்கப்படும் குடிநீர், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
இதனால், களக்காட்டூரில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதோடு, நீண்டநேரம் மின்மோட்டார் இயங்குவதால், மின்சாரமும் விரயமாவதுடன் மின் கட்டணமும் அதிகரிக்கும்.
எனவே, குடிநீர் வீணாகுவதை தடுக்கும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இணைப்புக்கான குடிநீர் குழாயை சீரமைக்க களக்காட்டூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

