/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் குழாயில் உடைப்பு ஓரிக்கையில் வீணாகும் தண்ணீர்
/
குடிநீர் குழாயில் உடைப்பு ஓரிக்கையில் வீணாகும் தண்ணீர்
குடிநீர் குழாயில் உடைப்பு ஓரிக்கையில் வீணாகும் தண்ணீர்
குடிநீர் குழாயில் உடைப்பு ஓரிக்கையில் வீணாகும் தண்ணீர்
ADDED : ஜூன் 26, 2025 11:36 PM

ஓரிக்கை:ஓரிக்கை பகுதியில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 51 வார்டுகளில் 1060க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை, திரவுபதியம்மன் கோவில் அருகில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.