/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபாலங்களின் நீர்வழித்தடம் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
/
சிறுபாலங்களின் நீர்வழித்தடம் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
சிறுபாலங்களின் நீர்வழித்தடம் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
சிறுபாலங்களின் நீர்வழித்தடம் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு
ADDED : மே 24, 2025 02:04 AM

கீழ்கதிர்பூர்,:தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் துாரப்பட்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக துப்பாடியில் இருந்து, இலுப்பை, வடஇலுப்பை, விஷார், பெரும்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலையின் குறுக்கே ஒன்பது இடங்களில் மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது.
இப்பாலங்களில் நீர்வழித் தடத்தில் செடி, கொடி, கோரைப்புல் வளர்ந்துள்ளது. இதனால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஒன்பது சிறுபாலத்தின்கீழ் துார்ந்துள்ளவற்றை அகற்றி, மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நீர்வழித்தடத்தை துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.